இன்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் சிக்கன சக்தி பயன்பாடு தொடர்பான விசேட கலந்துரையாடல் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் யூஎல்ஏ.அஸீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் மின்சாரம் மற்றும் எரிபொருட்களை சிக்கனமாக பாவிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தினை மாகான மட்டத்தில் அமுல்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதனை மேற்பார்வை செய்வதற்காக கீழ்வரும் உத்தியோகத்தர்கள் செயலாளரால் நியமிக்கப்பட்டார்.
1. சக்தி வள முகாமையாளர் - டீ.எச்.பிரியந்த, நிர்வாக உத்தியோகத்தர்
2. உதவியாளர் (நிர்வாகம்) - விக்ணேஸ்வரி, முகாமைத்துவ உதவியாளர்
3. உதவியாளர் (நிதி) - கீதாஞ்சலி, முகாமைத்துவ உதவியாளர்
4. உதவியாளர் (பொது) - கணேசலிங்கம், அலுவலக உதவியாளர்
அத்துடன் ஒவ்வொரு மாதமும் 10% அளவில் மின்சாரம் மற்றும் எரிபொருட்களை குறைப்பதெனவும் இவ்விசேட கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
Blogger
சுகாதாரம்



No comments:
Post a Comment