Wednesday, May 30, 2012

புதிய கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் திறப்பு - 26.05.2012




திருகோணமலை நீதிமன்ற வீதியில் அமைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் 26.05.2012 சனிக்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ ரியர் அட்மிரல் மொகான் விஜயவிக்கிரம, மாகாண சுகாதார அமைச்சர் கௌரவ எம்.எஸ்.சுபைர் அவர்களுடன் இணைந்து இதனை திறந்து வைத்தார்கள்.
           

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் ஆரியவதி கலபதி, பிரதம செயலாளர் வி.பி.பாலசிங்கம், அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், மாகாண சுகாதார பணிப்பாளர் எம்.தேவராஜன் மற்றும் பிராந்தி சுகாதார சேவைகள் பணிப்பாளர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

இப்பணிமனையானது 38 மில்லியன் ரூபா செலவில் PSDG நிதி ஒதுக்கீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Blogger
சுகாதாரம்

Saturday, May 12, 2012

Sectoral Discussion

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் திணைக்களங்களுக்கிடையிலான கலந்துரையாடல் 09.05.2012 ம் திகதி சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் காலை 10.00 மணிக்கு அமைச்சின் செயலாளர் யூஎல்ஏ.அஸீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 


இந்திகழ்வில் அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர், மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர், சுதேச வைத்தியத் துறைப் பணிமனை உத்தியோகத்தர்கள், சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர், சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர், கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர், விளையாட்டுத் திணைக்கள பணிப்பாளர் மற்றும் சுகாதார அமைச்சின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.


இக்கலந்துரையாடலில் 17.05.2012 ம் திகதி நடைபெறவுள்ள ஆளுநர் அவர்களுடனான மாகாண முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவேண்டிய தகவல்கள் பற்றியும் புள்ளிவிவர கையேடு தயாரித்தல் பற்றியும் விசேடமாகக் கலந்துரையாடப்பட்டது. 


இந்நிகழ்வு நன்பகல் 1.30 அளவில் நிறைவுபெற்றது.




Blogger
சுகாதாரம்

Wednesday, May 9, 2012

உத்தியோகத்தர்கள் / ஊழியர்கள் கூட்டம் - 28.03.2012


கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் மேற்படி கூட்டம் 28.03.2012 பி.ப. 2.30 மணிக்கு சுகாதார அமைச்சு கேட்போர் கூடத்தில் அமைச்சின் செயலாளர் யூஎல்ஏ.அஸீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அலுவலக நடைமுறைகள் தொடர்பிலான கீழ்வரும் விடயங்கள் ஆராயப்பட்டன.

1. உத்தியோகத்தர்கள் வரவு
2. வாகன மற்றும் அலுவலர்களின் நகர்வுப் பதிவேடு (Movement Register)
3. விடுமுறை
4. Call-up Diary பாவனை
5. மின்சார மற்றும் தொலைபேசிப் பாவனை
6. சிற்றூழியர்களின் விடுமுறைகள்
7. திட்டமிடல், நிதி மற்றும் பொறியியல் பிரிவுகளை இடமாற்றுதல்
8. அலுவலக சீரூடை
9. 5's முறைமையை அமுல்படுத்தல்
10. கூட்டங்களுக்கான கடிதங்களை ஒழுங்கமைத்துப் பேணல்
11. குடிநீர் தேவைகள்
12. மற்றும் ஏனைய விடயங்கள்

மேற்கூறப்பட்ட விடயங்கள் யாவும் உத்தியோகத்தர்கள் மற்றும் செயலாளலர் அவர்களினால் ஆராயப்பட்டு உரிய அறிவுறுத்தல்கள் மற்றும் நடவடிக்கைக் குறிப்புகள் செயலாளரினால் வழங்கப்பட்டன.

இக்கூட்டம் பி.ப. 4.45 மணியளவில் நிறைவுபெற்றது.



Blogger
சுகாதாரம்

சித்திரைப் புத்தாண்டு விழா 2012

கிழக்கு மாகாணத்தின் சித்திரைப் புத்தாண்டு விழா 19.04.2012 அன்று உவர்மலை விளையாட்டு மைதானத்தில் கொளரவ கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்ரம அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு பல நிகழ்வுகளில் திறமைகளை வெளிக்காட்டி பல பரிசில்களை தட்டிச் சென்றது.

1. சிறந்த இல்லம் - 1ம் இடம்
2. கயிறிழுத்தல் (பெண்கள்) -1ம் இடம்
3. கயிறிழுத்தல் (ஆண்கள்) - 1ம் இடம்
4. சைக்கிளோட்டம் (ஆண்கள்) - 1ம் இடம்
5. வேக நடை (பெண்கள்) - 2ம் இடம்
6. பலூன் ஊதுதல் - 1ம் இடம்
7. கூடைப்பந்து - 1ம் இடம்
8. தேங்காய் துருவுதல் - 1ம் இடம்





சிறந்த இல்லத்திற்கான முதலாம் பரிசு


கயிறிழுத்தல் (ஆண்கள்) -முதலாம் பரிசு


கயிறிழுத்தல் (பெண்கள்) -முதலாம் பரிசு



சிறந்த இல்லத்திற்கான விருதை கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களிடமிருந்து சுகாதார அமைச்சின் செயலாளர் அவர்கள் பெறுகின்றார்

Tuesday, May 8, 2012

சிக்கன சக்தி பயன்பாடு



இன்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் சிக்கன சக்தி பயன்பாடு தொடர்பான விசேட கலந்துரையாடல் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் யூஎல்ஏ.அஸீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் மின்சாரம் மற்றும் எரிபொருட்களை சிக்கனமாக பாவிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தினை மாகான மட்டத்தில் அமுல்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதனை மேற்பார்வை செய்வதற்காக கீழ்வரும் உத்தியோகத்தர்கள் செயலாளரால் நியமிக்கப்பட்டார்.


1. சக்தி வள முகாமையாளர் - டீ.எச்.பிரியந்த, நிர்வாக உத்தியோகத்தர்

2. உதவியாளர் (நிர்வாகம்) - விக்ணேஸ்வரி, முகாமைத்துவ உதவியாளர்

3. உதவியாளர் (நிதி) - கீதாஞ்சலி, முகாமைத்துவ உதவியாளர்

4. உதவியாளர் (பொது) - கணேசலிங்கம், அலுவலக உதவியாளர்

அத்துடன் ஒவ்வொரு மாதமும் 10% அளவில் மின்சாரம் மற்றும் எரிபொருட்களை குறைப்பதெனவும் இவ்விசேட கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.


Blogger
சுகாதாரம்

வரவேற்கிறோம்......வரவேற்கிறோம்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் Blog இற்கு வரவேற்கின்றோம்.




Blogger