Tuesday, October 9, 2012

கிழக்கு மாகாண சுசாதார அமைச்சரின் உத்தியோகபூர்வ பதவியேற்பு



கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்திய, சமூக சேவைகள், சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரப்பு, விளையாட்டு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக கௌரவ. எம்.ஐ. முஹம்மது மன்சூர் அவர்கள் அமைச்சின் கடமைகளை உத்தியோகபூர்வமாக பாரமேற்கும் நிகழ்வு  2012.10.09 ம் திகதி காலை  11.00 மணியளவில் கிழக்கு மாகாண  சுகாதார அமைச்சின் செயலாளர் கலாநிதி. எஸ். அமலநதான் அவர்களின் தலைரமையில் நடைபெற்றது.












இந்நிகழ்வுக்கு கௌரவ. கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்-ஹாஜ். நஜீப் அப்துல் மஜீத், கௌரவ. வீதி அபிவிருத்தி அமைச்சர் உதுமாலெப்பை அவர்கள், கௌரவ விவசாய அமைச்சர் நஸீர் அஹமட் அவர்கள், திருயோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தௌபீக் அவர்கள், கௌரவ கிழக்கு மாகாணசபை தவிசாளர் ஆரியவதி கலப்பத்தி அவர்கள், கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாண பிரதம செயலாளர். திரு. அபேகுணவர்தண அவர்கள் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மற்றும் ஊழியர்கள் ஏராளமானோர் பங்கேற்றார்கள். 

கௌரவ அமைச்சருக்கு சுகாதார அமைச்சின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பாராட்டுதலையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

Blogger
Health

Thursday, September 27, 2012

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்



கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்திய, சமூக சேவைகள், சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரப்பு, விளையாட்டு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுக்கு புதிய செயலாளராக கிழக்கு மாகாண முதமைச்சரின் செயலாளர்  கலாநிதி. எஸ். அமலநாதன் அவர்கள் 25.09.2012 இலிருந்து செயற்படும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். 

புதிய செயலாளருக்கு சுகாதார அமைச்சின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பாராட்டுதலையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

Blogger
Health

Wednesday, September 26, 2012

சுகாதார அமைச்சின் ​செயலாளர் இடமாற்றம்


கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்திய, சமூக சேவைகள், சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரப்பு, விளையாட்டு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஜனாப். யூஎல்ஏ. அஸீஸ் அவர்கள் 25.09.2012 இலிருந்து செயற்படும் வண்ணம் கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். 

செயலாளருக்கு சுகாதார அமைச்சின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பாராட்டுதலையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

Blogger
Health

Thursday, August 2, 2012

Health Sector Progress Review Meeting - 31.07.2012

Department of Health Progress review meeting held on 31.07.2012 at Health Ministry's Conference Hall chaired by Secretary to the Ministry and Director, Department of Health ,04 Regional Directors of Health Services and other staff were present and the following matters were discussed.


1. Progress of AIP in 2012 under CBG, PSDG
2. Line Ministry - Special Project
3. Donor funded Projects
4. Dengue Control
5. Opening Building / Website Information
6. Unused building
7. MTARF report submission
8. General Administrative Matters




Wednesday, July 25, 2012

Workshop on Medium Term Agency Results Framework Held

 
Chief Secretary, EP
Chairman, Finance Commission
Management Consultant, Finance Commission
DCS(Planning), EP
 
 Other Officials from Eastern Provincial Council

The Workshop on preparation of Medium Term Agency Results Framework (MTARF) for the Eastern Province was conducted on 23 & 24th July 2012 at the Conference Hall of the EPC in Varothayanagar, Trincomalee.

It was the Seventh workshop conducted by the Finance Commission in the series of workshops being conducted for the other provinces as directed by the Presidential Secretariat. The aim of this workshop was to facilitate the provincial ministries and departments on the preparation of Medium Term Agency Results Framework for each Province. This was organized in collaboration with the Eastern Provincial Council.

 From the Health Ministry Ministry Official and Department Heads and staff also participated. 

  
 Department of Health Team

Department of Social Services Team


Department of Probation & Childcare Services Team

 
Finance Commission Contacts

Wednesday, July 18, 2012

பிரியாவிடை வைபவமும் சேவைநலன் பாராட்டலும் 17.07.2012

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் சேவையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் பணிப்பாளர் (வேலைகள்) திரு.எம்.ஏ.பிரான்ஸிஸ் (எந்திரி. வகுப்பு 1) அவர்கள் மற்றும் திரு. ரி.நாகராஜா, முகாமைத்துவ உதவியாளர் வகுப்பு 1 அவர்களுக்கான பிரியாவிடை வைபவமும் சேவைநலன் பாராட்டும் அமைச்சில் சேவையாற்றி இடமாற்றம் பெற்றுச் செல்லும் திரு. கோ.சற்குணலிங்கம், நிர்வாக உத்தியோகத்தர் அவர்களுக்கான பிரியாவிடை வைபவமும் 17.07.2012 மாலை 02.30 மணியளவில் சுகாதார அமைச்சு கேட்போர் கூடத்தில் அமைச்சின் செயலாளர் திரு. யூஎல்ஏ.அஸீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.










Friday, July 13, 2012

Staff Meeting - 12.07.2012

சுகாதார அமைச்சின் உத்தியோகத்தர்கள்/ஊழியர்கள் கூட்டம் 2012.07.12 ம் திகதி பி.ப. 02.30 மணியளவில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் சுகாதார அமைச்சின் செயலாளர் யூஎல்ஏ.அஸீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.




 

26.03.2012 இல் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் மீளாய்வு செய்யப்பட்டு அதன் பெறுபேறுகள் பரிசீலிக்கப்பட்டன.

அதன் பின்னர் கீழ்வரும் விடயங்கள் ஆரையாப்பட்டு அதற்கான நடவடிக்கை உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டனர்.


Tuesday, July 10, 2012

New Japanese Loan for Developing Kaluwanchikudy Base Hospital

Japan International Cooperation Agency (JICA) agreed with Government of Sri Lanka (GoSL) for the improvement of Basic Social Services targeting the lagging behind regions.

355 Million Rupees allocated for this project and approved by the cabinet of Members on 01.06.2012.

From this Project, Base Hospital of Kaluwanchikudy was selected to implement this project. Steering committee and Project implementing unit were selected for this project. 


Chief Secretary of Eastern Province was appointed as Chairman of Steering Committee and the following staff were the members of this Project.

1. Mr.ULA. Azee, Secretary, Ministry of Health, EP
2. Mr. Sunil Pulukkody, National Project Director
3. Dr. M. Thevarajan, PDHS, EP
4. Mr. Mayooragirinathan, DCS(Finance), EP
5. Dr. ALF.Rahman, MO (Plan), RDHS, Batticaloa

Project manager of the Project Implementing Unit (PIU) was Dr. M. Thevarajan, PDHS, EP

1st meeting was held on 10.07.2012 to decide the Chairman for the Interview Board and confirm the members of the PIU. Mr. ULA. Azeez, Secretary of the Minisry of Health, EP was selected as interview board chairman.



Monday, July 9, 2012

சேவையிலிருந்து ஓய்வு பெறல் - திரு.ரி.நாகராஜா, மு.உ. வகுப்பு 1


கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் பணியாற்றும் திரு. ரி.நாகராஜா, முகாமைத்துவ உதவியாளர் வகுப்பு 1 அவர்கள் 09.07.2012 இலிருந்து தனது 60 வது வயதில் ஓய்வு பெற்றுச் செல்கின்றார். இவர் சுமார் 30 வருடம் அரச சேவையில் சேவையாற்றிய சிரேஷ்ட உத்தியோகத்தராவார். இவர் 21.06.1982 இல் சேவையில் இணைந்து பல அலுவலகங்களில் கடமையாற்றி பழுத்த நிர்வாகம் தெரிந்த உத்தியோகத்தராவார்.

அவரின் ஓய்வூதியத்தின் பின்னரான காலம் சாந்தியும் சமாதானமும் நிறைந்ததாக அமைவதற்கு இறைவன் உதவியாயிருப்பான் என்று செயலாளர், உதவிச் செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் அமைச்சின் அனைத்து அலுவலர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

Blogger
சுகாதாரம்

Thursday, July 5, 2012

Sectoral Meeting

Health Ministry Sectoral meeting held on 05.07.2012 today at Ministry's Conference Hall  chaired by Secretary to the Ministry and All department heads were present the following matters were discussed.



07 Department Heads were present to this meeting who are coming under our purview and the following matters were discussed.

1. Progress of AIP 2012
2. Submission of firm estimate
3. Human rights commission required details - 2008/2012
4. Mid Term Agency Result Frame Work programme submission
5. Dengue Control
6. Website update
7. NERDC construction programme
8. Administrative Report


Wednesday, June 27, 2012

அமைச்சரின் பிரியாவிடை வைபவம்

கிழக்கு மாகாண சபை 27.06.2012 நள்ளிரவு கலைக்கப்பட்டதற்கிணங்க கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பிரியாவிடை வைபவம் 27.06.2012 மாலை 04 மணியளவில் அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.






 இந்நிகழ்வு அமைச்சின் செயலாளர் யூஎல்ஏ.அஸீஸ் அவர்களின் தலைமையில் அமைச்சின் கீழ் உள்ள 07 திணைக்களங்களின் பணிப்பாளர்கள்/ஆணையாளர்கள் மற்றும் அமைச்சின் உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.

சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் நியமனம் 2012

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் அமைச்சின் கீழ் 03 பேருக்கான சமூக சேவைகள் உத்தியோகத்தருக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு 27.06.2012 அன்று அமைச்சின் அலுவலகத்தில் வழங்கப்பட்டது.





மொறவெவ, தம்பலகமம் மற்றும் வெருகல் பிரிவிற்கு இவர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

Saturday, June 23, 2012

மாகாண விளையாட்டு விழா - 23-24.06.2012

மாகாண விளையாட்டு விழா 23.06.2012 காலை 08.00 மணி தொடக்கம் 24.06.2012 மாலை 05.00 மணி வரை அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

முதல் நாள் நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக கௌரவ. பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட உணவுப் பாதுகாப்பு அமைச்சருமான பி.தயாரத்ன அவர்களும் கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்ச்ர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கௌரவ கிழக்கு மாகாண கல்வியமைச்சர், கௌரவ கிழக்கு மாகாண விவசாய அபிவிருத்த அமைச்சர் டாக்டர் ரீ.என்.நவரத்தினராஜா மற்றும் கௌரவ அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் அவர்களும் கலந்து சிறப்பிப்பதுடன் விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண பிரதம செயலராளர் வி.பி.பாலசிங்கம் அவர்களும் அம்பாறை மேலதிக அரச அதிபர் அசங்க அபேவர்தன மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனிபா அவர்களிம் கலந்து சிறப்பிக்கின்றார்கள்.

இரண்டாம் நாள் நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக கௌரவ. கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விநேவிக்ரம அவர்களும் அவர்களும் கௌரவ அம்பாறை பாராளுமன்ற உறுப்பினரும் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா அவர்களும் கலந்து சிறப்பிப்பதுடன் கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கௌரவ கிழக்கு மாகாண கல்வியமைச்சர், கௌரவ கிழக்கு மாகாண விவசாய அபிவிருத்த அமைச்சர் டாக்டர் ரீ.என்.நவரத்தினராஜா அவர்களும் கௌரவ அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, ஶ்ரீயானி விஜேவிக்ரம, எச்.எம்.எம்.ஹஸனலி, பைசல் காசீம், எச்.எம்.எம்.ஹரீஸ், பீ.பியசேன மற்றும் கௌரவ அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் அவர்களும் கலந்து சிறப்பிப்பதுடன் விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண பிரதம செயலராளர் வி.பி.பாலசிங்கம் அவர்களும் அம்பாறை அரச அதிபர் நீல் டீ அல்விஸ் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனிபா அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.




சுகாதரம் - ப்ளாக்கர்